திருப்புவனத்தில் நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாமினை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்.
'வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாமினை' முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் பேரூர் கழகம் பகுதி சையது இஸ்மாயில் அவுலியா ஆரம்ப பள்ளியில் வாக்கு சாவடி எண் 23, 24, 25, 26, 27 பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் மேற்கு ஒன்றியம் நயினார்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி வாக்கு சாவடி எண் 60ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் மேற்கு ஒன்றியம் வெள்ளைக்கரை சமுதாய கூடம் வாக்கு சாவடி எண் 63ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் மேற்கு ஒன்றியம் அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்கு சாவடி எண் 61, 62ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் கிழக்கு ஒன்றியம் வயல்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடி எண் 103ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் கிழக்கு ஒன்றியம் பிரமனூர் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 101, 102ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல், திருப்புவனம் கிழக்கு ஒன்றியம் பழையனூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 93, 94ல் பாக முகவர்களுடன் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல் ஆகிய பணிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழராங்கியம் கிராமத்தில் கலைஞரின் 'வருமுன் காப்போம்' திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு திட்ட பயனாளி பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேலிட பார்வையாளர் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கே. ஆர். என். போஸ், மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தி சேங்கைமாறன், திருப்புவனம் பேரூர் கழக செயலாளர் நாகூர்கனி, வாக்குச்சாவடி பாகம் முகவர்கள், கிளைச் செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment