மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரத்தில் உள்ள புனித செயின்ட் மேரிஸ் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜகம்பீரத்தில் உள்ள புனித செயின்ட் மேரிஸ் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் கலைத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கலையின் பெருமைகளை எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகுமான், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புவனேஸ்வரன், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், அஸ்மிதா பானு, வட்டார வள மேற்பார்வையாளர் ராமையா, கிளைக் கழகச் செயலாளர் சையது, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நாகராஜ், மாவட்ட தொழிலாளர் அணி புவியரசு, ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment