மானாமதுரையில் திமுக சார்பாக பாகமுகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பாகமுகவர்கள் (BLA 2) கூட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 2026 தேர்தலுக்கு முன்னெடுக்க வேண்டிய ஆயத்த பணிகள், வாக்காளர் சேர்ப்பு, கழகத்திற்கு ஆற்றக்கூடிய பணிகள், அரசின் நலத்திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு செல்லுதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் திரு. கே. என். ஆர். போஸ், மாவட்ட கழகத் துணை செயலாளர் சேங்கைமாறன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. ராஜாமணி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment