இளையான்குடியை அடுத்த இரசூலாசமுத்திரம் பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அமைத்து தருமாறு பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட இரசூலாசமுத்திரம் வார்டு எண் 10 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், குறிப்பாக Telc சர்ச் காம்பவுண்ட், முனீஸ்வரர் புதுநகர் மற்றும் நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் மழை நீர் ஏரி மற்றும் குளம் போல் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்துக்கு, மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். கூடுதலாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பரிந்துரையின் பேரில் ரூபாய் 75 லட்சம் இரசூலாசமுத்திரம் வார்டு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த ஒரு அடிப்படை வசதியும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் முதல்வரின் முகவரிக்கு மனு அளித்தனர்.
அம்மனுவிற்கு அளிக்கப்பட்ட பதில் மனுவில் இந்த ஆண்டு 50 சதவீத தொகைக்காண பணிகளையும் அடுத்த ஆண்டு 50 சதவீத தொகைக்காண பணிகளையும் ஒப்பந்தம் வரவழைக்கப்பட்டு விரைந்து முடிக்கப்பட இருப்பதாகவும் பதில் மனு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றி தருமாறு இரசூலாசமுத்திரம் வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment