கூத்தனூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பயணி கூடையை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் கூத்தலூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள், கல்லல் ஒன்றிய நிர்வாகிகள், கூத்தலூர் ஊராட்சி நிர்வாகிகள், மாநில மாவட்ட நகர சிறுபான்மை துறை நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூத்தலார் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment