சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் 15வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கை மாவட்டம் சார்பாக 15வது மாவட்ட மாநாடு சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடமான தோழர் முருகேசன் - தோழர் ராமசாமி அரங்கத்தில் மாவட்டத் தலைவர் பொ. கண்ணதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊழியர் ஒற்றுமை பேரணி, கொடியேற்றம், தியாகிகளுக்கு அஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வரவேற்புரையை மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா நிகழ்த்தினர். தொடர்ச்சியாக மாநில துணை பொது செயலாளர் என். வெங்கடேசன் அவர்கள் தொடக்க உரையும், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைப்பு வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் மாரி நிதிநிலை அறிக்கையும் நிகழ்த்தினர். அடுத்ததாக தோழர் தமிழ்கனல் தொழிற்சங்க பாடல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment