காரைக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட சிறுபான்மை துறையை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறையை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் திரு சையது இப்ராஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் முன்னிலை வகித்து நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் மாநில சிறுபான்மைத்துறை துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் பால் நலத்துறை, மாவட்ட வட்டார நகர காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறையை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment