கீழராங்கியம் கிராமத்தில் புதிய நாடக மேடைக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலராங்கியம் ஊராட்சி கீழராங்கியம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நாடக மேடைக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடத்திற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, திருப்புவனம் பேரூர் கழகச் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட விவசாய அணி டி. ஆர். சேகர், திருப்புவனம் பேரூர் துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, மாணவரணி பாண்டி கிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment