திருப்புவனத்தில் திமுக கட்சியின் சார்பாக 'பாக முகவர்கள் கூட்டம்' நடைபெற்றது.
சவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் கிழக்கு, மேற்கு மற்றும் பேரூர் கழகத்திற்கான பாக முகவர்கள் கூட்டம் (BLA-2) தொகுதி பொறுப்பாளர் திரு கே. ஆர். என். போஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாக முகவர்கள் 2026 தேர்தலில் ஆற்ற வேண்டிய ஆக்க பணிகள் குறித்தும், வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, பேரூர் கழகச் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கழக செயலாளர் கடம்பசாமி அவர்களும், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக் முகவர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment