சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் விளக்கில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையிலும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆனந்தன் முன்னிலையிலும், இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் முன்னேற்பாட்டில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் அலெக்ஸ், முத்துக்குமார், கருப்பையா, அருண்பாண்டியன், கார்த்திக், செய்தி தொடர்பாளர் கலைராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி விஷ்ணு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment