மேலப்பசலை கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த கண்ணாய் நீரால் பொதுமக்கள் பெரும் அவதி. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மேலப்பசலை ஊராட்சியில் நீர்ப்பிடிப்பு பாசன கண்மாய் நிரம்பியதால் திறக்கப்பட்ட நீரால் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் நீர் புகுந்ததால் கிராம பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது வைகை ஆற்றில் சென்று கொண்டுள்ள நீர் காரணமாகவும், தொடர் மழையின் காரணமாகவும், கண்மாய் நிரம்பியதால் அருகிலுள்ள எம். கரிசல்குளம் கிராமத்திற்கு கழுங்கு மூலமாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கால்வாயானது உடைப்பு ஏற்பட்டதில் கிராமத்திற்குள் உள்ள வீடுகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளாகி வருகின்றனர்.
எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி கண்மாய் நீர் திறக்கப்பட்டதின் விளைவாக நீரானது கிராமத்திற்குள் புகுந்துள்ளது என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் நீரில் அடித்து வரப்படும் விஷப் பூச்சிகளால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக உடைப்பு ஏற்பட்ட கன்மாயை சரி செய்து, சூழ்ந்துள்ள நீரை அப்புறப்படுத்துமாறு கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment