மடப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் தொடர்ச்சியாக மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் த. சேங்கைமாறன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியப் பெருமக்கள், பள்ளி குழந்தைச் செல்வங்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment