தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் ச. பாரி மற்றும் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் ஆகியோர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்காக இயக்குனர் ஆகியோருக்கு 'பிற துறை பணிகளை ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது திணிக்கும் நடைமுறைகளை முற்றாக கைவிடக்கோரி' மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர்.
அம்மனுவில் கோரப்பட்டுள்ளதாவது, வேளாண்மைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய Digital Crop Survey சார்பான பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவும், மேலும் Digital Crop Survey பணிகளை மேற்கொண்டு வரும் கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் கழிப்பறை வசதிகள், உரிய பாதுகாப்பு, மற்றும் தேவையான தளவாடங்களை ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் எனவும், மேலும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அவர்களுடன் தேவையான ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் நடைமுறை சாத்தியங்கள் அற்றதாக உள்ளது.
தமிழக அரசே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்துடன், கடந்த காலங்களால் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது பணிநெருக்கடிகள் நிறைந்த துறை ஊரசு வளர்ச்சித்துறை என்று ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தற்போது வேளாண்மைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய Digital Crop Survey பணியினை ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது திணிக்கும் நடைமுறைகள் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
வளர்ச்சித்துறையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் முன்னேற்றம் சார்பாக பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கற்ற ஆய்வுகள் இத்துறை ஊழியர்கள் மத்தியில் கடுமையான கசப்புணர்வினையும், திட்டக் செயலாக்கம் சார்பாக தமிழக அரசு அளித்து வரும் சாத்தியமற்ற இலக்குகள் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்று சாத்தியமற்ற இலக்குகள், உரிய கால அவகாசம் வழங்கப்படாதது, காலகடந்த நள்ளிரவு வரையிலான ஆய்வுகள், விடுமுறை தின ஆய்வுகள் என வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வரும் நிலையிலும், கடுமையான பணிச்சூழல்களுடன் பணிபுரிந்து வரும் வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிற துறை பணிகளை திணிக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுமாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் பார்வையில் காணும் நடவடிக்கைகளை Digital Crop Survey பணிகளை வளர்ச்சித்துறை அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் புறக்கணிப்பது என்ற முடிவும் TNRDOA சார்பாக மேற்கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment