மானாமதுரை சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது, நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பங்கேற்பு.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேரு அவர்களின் திருஉருவ படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேரு அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மானாமதுரை உள்ள சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜே. எஸ். பிளாரன்ஸ் பெனட் முன்னிலை வகித்தார். நடைபெற்ற இந்த குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களால் அனுப்பப்பெற்ற குழந்தைகள் தின வாழ்த்துமடல் சுற்றறிக்கையும் தலைமை ஆசிரியர் அவர்களால் வாசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பள்ளி மாணவ மாணவிகளின் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த குழந்தைகள் தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், நகர் காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜே. கெ. லிவிங்ஸ்டன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பொம்முராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment