மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நமது பாபா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் இந்திய பிரதமர் நேரு அவர்களின் 135 வது பிறந்த நாள் விழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தேன் மிட்டாய், கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி குழந்தைகள், பெரியவர்களுக்கு உதவும் திட்டம் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தின விழா அன்று செயல்படுத்தப்படுகிறது. இன்றைய தினம் 25 மூத்த குடிமக்களுக்கு அரிசி, பருப்பு ,காய்கறிகள், சேலை , போர்வைகள் ஆகியவை குழந்தைகள் மூலம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர்களின் பட்டிமன்றம் மற்றும் விளையாட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வினிய விழாவிற்கு பாபா கல்வி குழுமத்தின் நிறுவனர் அம்மா ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். மூன்றாவது வார்டு கவுன்சிலர் திருமதி கங்கா மற்றும் மகளிர் காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகி திருமதி மீனாட்சி ஆகியோர் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவின் முன்னேற்பாடுகளை திருமதி மு. சாரதா மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment