திருப்பத்தூரில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் "ரைசிங் யூத்" எழுச்சி கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு "ரைசிங் யூத்" எழுச்சி கூட்டம் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு பிரவீன்குமார் அவர்களின் தலைமையிலும், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாந்த் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில மாவட்ட சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment