மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஸ்ரீ சாய் பாபாவின் 99 பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 99 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் பேச்சுப்போட்டி, நடனம் என பல்வேறு போட்டிகள் பள்ளியின் நிறுவனர் திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாபா மெட்ரிக் பள்ளியிலிருந்து ஆனந்தவல்லி அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக (நகரசங்கீர்த்தனம்) பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்களுடன் சென்றனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மங்கள ஆரத்தி முடிந்த பிறகு சுந்தரநடப்பில் உள்ள கருணாலயத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு ,உடை , பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் குழந்தைகள் கையில் கொடுத்து வழங்கப்பட்டது. இவ்விழாவின் இறுதியில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு கேக் வெட்டப்பட்டு விழா நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment