தேசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை.
தேசிய அளவிலான யோகாசன போட்டி இந்திய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பிலிருந்து கடந்த 16 மற்றும் 17ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள அனுராக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் சார்பாக மொத்தம் 83 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழக அணியின் சார்பாக சிவகங்கை மாவட்டத்திலிருந்து 3 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றனர். 14 வயதிற்கு உற்பட்ட பிரிவில் ஆர். தருண் முதல் பரிசினையும், 10 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆர். ஹரிச்சரன் இரண்டாம் பரிசையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மாண்புமிகு சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் பெற்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலாளரும், சாய் மகிழ் யோகா மையத்தின் பயிற்ச்சியாளருமான யோகா ஆச்சாரியார் திரு பூ. புவனேஷ் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். வெற்றி பெற்ற இம்மாணவர்கள் சாய் மகிழ் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment