காரைக்குடியில் மெகா மாரத்தான் ஓட்டம் குழந்தைகள் மாணவ மாணவிகள் என 4500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு! பெற்றோர்கள் பொதுமக்கள் என 6000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சி.எஸ்.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமலா கருத்தரிப்பு மையம் அழகப்பா உடற்பயிற்சி கல்லூரி மற்றும் கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சி கல்லூரி இணைந்து நடத்தும் மாணவர் தின மரத்தான் ஓட்டம் நடைபெற்று வருகிறது ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரமும் மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக ஐந்து கிலோ மீட்டர் தூரமும் மாரத்தான் ஓட்டப்பந்தயமும் 18 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினருக்கு ஒன்பது கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர் 4500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடி வருகின்றனர் சிறப்பு அழைப்பாளர்களாக வித்யாகிரி கல்வி குழுமத்தாளாளர் சுவாமிநாதன் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஸ்வெங்கட், அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சுப்பையா, சிவகங்கை கூடுதல் எஸ்.பி.பிரான்சிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று மாரத்தான் ஓட்டம் பந்தைய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் ஏற்பாடுகளை டாக்டர் ஸ்டாலின் ராஜா, மற்றும் அமலா ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர் ஓட்டப்பந்தயத்தை காண பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையாளர்கள் என 6000த்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுக்காக காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
No comments:
Post a Comment