காரைக்குடியில் கலாலயா மியூசிக் அகாடமி இயக்குனர் முனைவர் கீதா அவர்களால் எழுதி மெட்டு அமைத்த ஐயப்ப கீதம் என்னும் பாடல் 23- 11- நவம்பர் மாதம் சனிக்கிழமை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ் சுப்பையா வெளியிட்டார்.
கலாலயா மியூசிக் அகாடமி இயக்குனர் முனைவர் கீதா அவர்களால் எழுதி மெட்டு அமைத்த ஐயப்ப கீதம் என்னும் பாடல் 23- 11- நவம்பர் மாதம் சனிக்கிழமை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ் சுப்பையா வெளியிட ,கற்பக விநாயகர் கோயில் குருக்கள் முனைவர் சிவஸ்ரீ பிச்சை குருக்கள், கலைக்கோயில் இயக்குனர். கலைமாமணி முனைவர் மா. சுப சரளா, சென்னை குயின் மேரி கல்லூரி இசைத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் .சாந்தி மகேஷ் மற்றும் பேராசிரியர் முனைவர். வி. சிவகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டு பாடல் வெளியிடப்பட்டது. இதனை பிரியா ஒலி ப்பதிவு கூடம் இயக்குனர் சுதாகர், இசை இயக்குனர் ராஜேஷ் ஹனி, பாடகி தில்சியா பாடகி நந்தினி கர்ணன், பாடகர் லயன் எஸ்.சரவணன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து குருக்களிடம் இருந்து ஆசீர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் முனைவர் பாகை கண்ணதாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் பாடல்களை இயற்றி பாடல்கள் மூலமாக கடவுளை துதிக்கலாம் என்ற நோக்கத்தில் முதல் முறையாக ஐயப்பசாமி மேல் பாடப்பட்டிருக்கிற பாடல் மாய மாளவ கௌளை ராகத்தில் கேட்ட உடனேயே மனதிற்கு நிம்மதி தரும் விதத்தில் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்பதனை முனைவர் கீதா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். மேலும் கலாலயா மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், சிறப்பு விருந்தினர்களிடமிருந்து மாணவர்கள் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டார்கள். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment