தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக 15வது சிவகங்கை மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 வது சிவகங்கை மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் தோழர் கண்ணதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அரசு ஊழியர்களின் கோரிக்கை பேரணி இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) மாவட்டத் தலைவர் தோழர் வீரையா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக வைகை தமிழ்க்கனல் மற்றும் வைகை பிரபா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சங்க பாடல்கள் பாடி சிறப்பித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் கிருஷ்ணகுமார் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் அமைப்பாளர் தோழர் லதா வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் இராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். TNGEA மாவட்ட பொருளாளர் மாரி வரவு - செலவுகளை வாசித்தார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் தெடக்கவுரை வழங்கினார்.
மேலும் சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மாநில செயலாளர் பாண்டி, கால்நடை ஆய்வாளர் சங்கம் மாநில தணிக்கையாளர் இராஜா முகமது, புள்ளியல்துறை அலுவலர்கள் சங்கம் மாநில செயலாளர் சரவணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட பொருளாளர் பெரியசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்கம் நவநீதக் கிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கம் கோபால், சாலைப்பணியாளர் சங்க செயலாளர் இராஜா, செவிலியர் சங்க நிர்வாகி தோழர் தீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்கம் மாநில துணைத் தலைவர் மு. செல்வராணி நிறைவுரையும், கோடை மலைக் குமரன் நன்றியுரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வாக மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மாரி, மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா மற்றும் துணைத் தலைவர்கள் வினோத்ராஜா (கூட்டுறவுத்துறை), கார்த்திக் (வளர்ச்சித்துறை), மூவேந்தன் (மருத்துவத்துறை), பாண்டி (சத்துணவு) மற்றும் இணைச் செயலாளர்கள் சின்னப்பன் (நெடுஞ்சாலைத்துறை), கிருஷ்ணகுமார் (வருவாய்த்துறை), பயாஸ் அகமது (வளர்ச்சித்துறை), கலைச் செல்வி (பொதுப்பணித்துறை) மற்றும் மாவட்ட தணிக்கையாளர்கள் ஜெயப்பிரகாஷ் (கூட்டுறவு), இராஜா முகமது (கால்நடை) ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, தொடரும் படுகொலைகள், வன்முறை சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. எதிர் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளைத் தடை செய்து, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என இம்மாநாடு, தமிழக அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அரசு ஊழியர் - ஆசிரியர் பணிப்பாதுகாப்பிற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசினை இம்மாநாடு வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment