சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பணிமாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிடல் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 November 2024

சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பணிமாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிடல்

 


சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பணிமாறுதலுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிடல். 


சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் வட்டார வளர்ச்சி‌ அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு மற்றும் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன்கருதி பணியிட மாறுதல் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் செயலாணைகள் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதனடிப்படையில் அலுவலர்களின் விடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள காலிப் பணியிடத்திற்கு திரு கா. ரமேஷ் கண்ணன் மற்றும் திரு எஸ்.  காதர் முகைதீன் ஆகியோருக்கு பதவி உயர்வும், திரு மு. ஜெகநாதசுந்தரம் மற்றும் திருப்பி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பணியிட மாறுதலுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேற்காணும் அலுவலர்களை உடனடியாக பதவியேற்பு செய்திட சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad