காரைக்குடி அருகே அரியக்குடி வேட்டைக்காரன்பட்டியிலுள்ள புனித ஜியாசப்பே மொஸ்காட்டி மனநல மறுவாழ்வு மையம், அன்பின் சகோதரர்கள் மையத்தில் 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்ட வனத்துறை, திருப்பத்தூர் சமூக வனச்சரகம் சார்பாக, தமிழ்நாடு பல்லுயிர் பசுமை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், மரக்கன்றுகள், வனத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பெற்று, நடவுசெய்யப்பட்டது.
அப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதோடு வருவாய் பயனுள்ளதாகவும் அமையும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் வில்ஃப்ரட் சுவாமிநாதன் முன்னிலையில், வன அலுவலர்களின் மேற்பார்வையில், 1000 மகாகனி, 1000 ஈட்டி வகை மரக்கன்றுகள் என 2000 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன.
வனத்துறை அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் இத்திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பயனடையுமாறு வனத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
No comments:
Post a Comment