திருப்புவனம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயிலுக்கான புதிய கட்டிடங்களில் குத்துவிளக்கேற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.
இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அ. மூர்த்தி, மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மானாமதுரை நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, சிவகங்கை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் விஜிலா ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார் மற்றும் திரு. பாலசுப்பிரமணியன், மடப்புரம் திருக்கோயில் அறங்காவலர் நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment