தமிழ்நாடு அரசு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்.
தமிழ்நாடு அரசு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிவகங்கை மாவட்ட அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி அவர்களின் தலைமையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பி. பாண்டி தொடக்க உரையும், மாவட்ட நிதி காப்பாளர் நடராஜன் கோரிக்கை விளக்கவுரையும் ஆற்றினர்.
மேலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 7850 ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும், 60 ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ள சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய GPF/ SPF பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூ பெற்ற ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்த ஓய்வூதியம் 5 லட்சம் வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் வீரையா, TNGEA மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் செல்லமுத்து, TNRDPA மாவட்ட செயலாளர் உதயசங்கர், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மணிமுரசு, சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் , தமிழ்நாடு வி. ப சங்க மாவட்ட தலைவர் கோபால், TNNMEA மாவட்ட செயலாளர் லதா, TNNMEA மாவட்டத் தலைவர் பாண்டி, TNNMEA மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இரா. இராதாகிருஷ்ணன் நிறைவுறையும், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் இராமனுஜம் நன்றியுரையும் ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment