சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 October 2024

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலைகிராமம், அண்டக்குடி, ஆழி மதுரை, தெ. புதுக்கோட்டை, தெற்கு சந்தனூர், மூங்கில்ஊரணி, இடைக்காட்டூர், கானூர், ஏனாதி, மணப்புரம், கீழடி, புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் தொகுதி பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பயணியர் விடுதியில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பதிலளித்தார். குறிப்பாக திருப்பதி லட்டு விவகாரம், காவிரி நீர் பங்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு சஞ்சய் காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை து. ஜா. பால் நல்லதுரை, சிவகங்கை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் திரு சையது இப்ராஹிம், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் கண்ணா, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை பகுதிகளை சேர்ந்த மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad