இளையான்குடி முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் சாலைகிராமம் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடக மேடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் மலையரசி ரவிச்சந்திரன், அவைத் தலைவர் கணேசன், கிளை செயலாளர் கோபிநாதன், இளைஞர் அணி ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்வாணன், நன்னியாவூர் கிளை செயலாளர் தங்கசாமி, மாவட்ட பிரதிநிதி கருணாகரன் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment