சிவகங்கையில் தமிழ்நாடு அரசு விடுதிப்பணியாளர் சங்கத்தின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசு விடுதிப்பணியாளர் சங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறை விடுதிகளை சேர்ந்த துறை சங்கங்களின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்டத் தலைவர்கள் கோபால் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சமையலர்கள்/ காவலர்கள் நிலையில் பணி மூப்பு அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சமையலர்கள்/காவலர்களை வாட்சப் குழுவில் பதிவிடச் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சமையலர்கள்/காவலர்களை உணவு பொருட்கள் எடுத்து வழங்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் இராமாயி, சங்கர், மாதவன், தனபால் மற்றும் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் முருகன், சிவபிரகாசம், மதன், வினோத் மற்றும் ராஜேஷ், மாவட்ட தணிக்கையாளர்கள் சிலம்பரராஜ் மற்றும் நவீன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment