மானாமதுரை பட்டத்தரசியில் சிறுவர்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 October 2024

மானாமதுரை பட்டத்தரசியில் சிறுவர்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்.


மானாமதுரை பட்டத்தரசியில் சிறுவர்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் பட்டத்தரசி கிராமத்தில் தெய்வத்திரு பாஸ்கரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவை முன்னிட்டு பட்டத்தரசியை சேர்ந்த சின்னக்கருப்பு 7"s குழு சார்பாக 40 கிலோ எடை சிறுவர்களுக்கான கபடி போட்டி மானாமதுரை 2வது வார்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திரு விஜய் அவர்களின் முன்னேற்பாட்டில் நடைபெற்றது. இதில் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், நகர்மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்து கபடி போட்டியினை தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணியினருக்கு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்வில் நகர் சிறுபான்மைத்துறை தலைவர், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் லிவிங்ஸ்டன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பொம்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் சிறப்பு பரிசாக ரூபாய் 5001 வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கபடி குழு, கபடி வீரர்கள், பள்ளி மாணவர்கள், போட்டிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad