சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் இரத்த சுத்தரிப்பு நிலையத்தின் புதிய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் இரத்த சுத்தரிப்பு நிலையத்தின் புதிய கட்டடத்தை சிதம்பரம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் சுகாதாரம் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment