மானாமதுரை சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் கான்கிரீட் மேற்கூறையை சரிசெய்திட பொதுமக்கள் வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை பழுதாகி மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை நீர் கசிவு ஏற்பட்டு பயணிகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்தில் பேருந்து வருகைக்காக காத்திருக்க வேண்டிய மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர்.
எனவே உடனடியாக பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையின் கான்கிரீட் மேற்கூறையை சரி செய்திட மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள பேருந்து பயணிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment