சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு எம். ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக பெருந்திரள் முறையீடு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு அளிக்கும் இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு அளிக்கும் இயக்கமானது மாவட்ட செயலாளர் பிரசன்னா பிரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்பெருந்திரள் முறையீடு அளிக்கும் இயக்கத்தின் கீழ் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு, 1. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் MRB தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2. புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லுரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சுமார் 1500 செவிலியர்கள் பணியிடங்களை எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்.
3. கொரோனா காலகட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். 4. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப NMC மற்றும் IPHS பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். 5. MRB செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். 6. NHM திட்டத்தின் கீழ் பணி செய்யும் செவிலியர்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அது போன்று தமிழ்நாட்டில் பணி செய்யும் செவிலியர்களுக்கும் நியாயமான வாழ்க்கைக்கு ஏற்ற, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
7. செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடம் உருவாக்கிட வேண்டும். 8. NHM திட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஊழியர்களுக்கு Loyalty Bonus வழங்கப்படுகிறது அது போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 9. NHM திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் ரூ 18000 மாக உயர்த்தப்பட்டதை போல் தமிழ்நாடு அரசின் கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். 10. வருடாந்திர ஊதிய உயர்வு 5% உயர்த்தப்பட்டு உத்தரவிட்ட நாளிலிருந்து செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட நாள் வரையிலான ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
11. காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். 12. ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை விடுப்பு கூட வழங்கப்படாமல் பணி செய்யும் நிலை உள்ளது அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிநேரத்தை உறுதி செய்திட வேண்டும். 13.பொது சுகாதார துறையின் (ஆரம்ப சுகாதார நிலையங்களில்) பழிவாங்கும் விதமான மாற்று பணி உத்தரவுகளை கைவிட வேண்டும். 14.இரவு பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 15. பணியிடத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment