நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாத எதிரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மானாமதுரை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய குற்ற எண். 620/2004 u/s,304(A)IPC கீழ் தொடரப்பட்ட வழக்கானது கனம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் CC NO.13/2022 என்ற வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி சுப்பையா த.பெ.சூரசங்கு சேர்வை வடக்கு சந்தனூர் மானாமதுரை தாலுகா என்பவர் மேற்படி நீதிமன்றத்தில் கடந்த 18.05.2022 ம் தேதி முதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாளது தேதி வரை நிலுவையில் இருந்து வருகிறது. எனவே மேற்படி வழக்கின் எதிரி சுப்பையா வருகின்ற 15.10.2024 ந் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதென்றும் தவறும் பட்சத்தில் மேற்படி எதிரியான சுப்பையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துகொள்வதாக மானாமதுரை காவல் ஆய்வாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment