சிவகங்கையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் வாகனங்கள் மீது 'நோ பார்க்கிங்' அபதாரம் விதிக்கும் காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தெப்பக்குளம் அருகில் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையில் பிரபல தனியார் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையானது மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்து வருகின்றனர். இம்மருத்துவமனை செல்லும் வழியில் "நோ பார்க்கிங்" என்ற பலகையையும் உள்ளது. மருத்துவமனைக்கு என்று போதுமான அளவு வாகன நிறுத்தும் இடங்கள், குறிப்பாக நான்கு சக்கர வாகனத்திற்கு வாகன நிறுத்துமிடம் ஏதும் கிடையாது.
எனவே பொதுமக்கள் மருத்துவமனை செல்ல பிரதான சாலையில் நின்று குழந்தைகளையும், பொதுமக்களையும் இறக்கிவிட்டு வாகன நிறுத்தும் இடத்திற்கு வாகனத்தை எடுத்து செல்வது வழக்கம். இதற்கிடையில் திங்கட்கிழமை காலை மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் கைக்குழந்தை மற்றும் தாயை மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் இறக்கிவிட்ட ஓட்டுநர் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு செல்வதற்காக தாய் மற்றும் குழந்தையை அழைப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று வாகனத்தில் ஏற்றிய நிலையில், நோ பார்க்கிங் என்ற காரணத்திற்காக ரூபாய் 500 அபதாரத்தை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
வாகனம் நிறுத்த இடமில்லாத நிலையில், ஓட்டுநர் வேறு ஒரு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்திலிருந்து அலைபேசியின் மூலமாக வீடு செல்வதற்கு அழைத்த பின்னர் இரண்டு நிமிடம் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்குள் அபதாரம் விதிப்பது எவ்விதத்தில் நியாயம். சாலையின் ஓரத்தில் யாருக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாத வண்ணம் பயணிகளை ஏற்றும் ஓட்டுனருக்கு தகுந்த அறிவிப்பு ஏதுமின்றி, காவல் வாகனத்தில் அமர்ந்த நிலையில் கையில் உள்ள அலைபேசியின் மூலம் அபதாரம் விதிப்பதை, வாகன ஓட்டிகள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
அதுவும் இக்குறிப்பிட்ட சாலையானது இருவழி போக்குவரத்து சாலை என்பது, வாகனத்தில் ஓட்டுநர் அமர்ந்திருக்கையிலும் வாகனம் இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும், இருவழிப் பாதையில் நோ பார்க்கிங் அபதாரம் என்பது எந்த வகையில் பொருந்தும், அப்படியே இரு வழிப் பாதையில் வாகனத்தை நிறுத்தி பயணிகளை குடும்பத்தினரை இறக்கி ஏற்றக்கூடாது என்றால் மருத்துவமனைக்கு நோயாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் எவ்வாறு மருத்துவமனையை சென்றடைவர் என்பது குறித்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குழப்பநிலையை அடைந்துள்ளனர் மற்றும் மருத்துவமனை அருகில் நியாய விலை கடையும் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இதில் தலையிட்டு தனி கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறும், வாகன ஓட்டிகளின் மன உளைச்சலை தவிர்த்திட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment