நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மானாமதுரை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய குற்ற எண். 434/2012 u/s, 341,302,301 IPC கீழ் தொடரப்பட்ட வழக்கானது கனம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் PRC NO.12/2022 என்ற வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் A1-முத்துக்கருப்பு த.பெ.மாரி கம்பூர் (இருப்பு) வடக்கு தெரு இராமநாதபுரம் A3- ராஜவிக்னேஷ் த.பெ.சோமசுந்தரம் அய்யா கண்ணு பிள்ளை தெரு இராமநாதபுரம் ஆகியோர்கள் மேற்படி நீதிமன்றத்தில் கடந்த 08.04.2022 ம் தேதி முதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாளது தேதி வரை நிலுவையில் இருந்து வருகிறது. எனவே மேற்படி வழக்கின் எதிரிகள் A1-முத்துகருப்பு A3-ராஜவிக்னேஷ் ஆகியோர்கள் வருகின்ற 04.11.2024 ந் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதென்றும் தவறும் பட்சத்தில் மேற்படி எதிரியான A1-முத்துக்கருப்பு A3-ராஜவிக்னேஷ் ஆகியோர்கள் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துகொள்வதாக மானாமதுரை காவல் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment