தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பாக தாராபுரம் கோட்டப் பொறியாளர்களை கண்டித்து சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பாக தாராபுரம் கோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 'உள்ளிருந்து உரிமை கோரும் இயக்கம்' தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் 'உள்ளிருந்து உவமை கூறும் இயக்கம்', தாராபுரம் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளரை கண்டித்தும், சாதிய உணர்வை தூண்டும் விதமாக பேசிய உதவி கோட்ட பொறியாளரை வன்மையாக கண்டிக்கும் விதமாக சிவகங்கை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில்' காத்திருப்பு போராட்டம்' மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் தொடக்கவுரையும், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்ணதாசன் வாழ்த்துரையும் வழங்கினர். மேலும் தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் முத்தையா மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment