சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொழில் வணிக கழகச் செயற்குழுக்கூட்டம் (அக்- 25) இரவு 7 மணிக்கு தொடங்கியது. 60 உறுப்பினர்கள் சிறப்பாக வருகை தந்தனர். தலைவர் சாமிதிராவிடமணி தலைமை உரையாற்றினார்கள், இக்கூட்டத்திற்கு பொருளாளர் KN. சரவணன் (SLP) முன்னிலை வகித்து, வரவு - செலவு கணக்குகளை சிறப்பாக ஒப்படைத்து அனைவரும் மனமகிழ்வுடன் ஏற்றனர். மேலும் இக்கூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1) திருவாரூரிலிருந்து காரைக்குடி, மானாமதுரை, மதுவவழியாக பழனிக்கு புதிய இரயில் சேவையை தொடங்கப்பட வேண்டும். 2) திருச்சி - ஈரோடு, கோவை, பாலக்காடு செல்லும் தினசரி இரயிலை காரைக்குடி (அல்லது) இராமேசுவரம் வரையிலும், அது போல திருச்சி, காரைக்குடி விருதுநகர் தினசரி மெழு பாசஞ்சர் இரயிலை தூத்துக்குடி வரையிலும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை இரயில்வே பொதுமேலாளர், திருச்சி, மதுரை கோட்ட மேலாளருக்கும் வலியுறுத்தி இயற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர்கள் S. காசி விசுவநாதன், GTS. சத்தியமூர்த்தி, சித்திரவேல், இணைச் செயலாளர்கள் AR.கந்தசாமி, என். நாச்சியப்பன், S. சையது, VR. இராமநாதன், வெங்கடாசலம் உட்பட ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாபெரும் சாதனையாளர் மாணவி "குறள் சூடி உமையாள் "கலந்து கொண்டார். இவர் காரைக்குடி கண்ணன் பசாரில் பழம்பெரும் நிறுவனம் "ரேடியோ பேலஸ்" மேனா என அன்புடன் அழைக்கப்பட்ட திருமிகு. மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேத்தி ஆவார். அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாசா மய்யத்திற்கு "தமிழகத்தில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, அங்கு பயிற்சியுடன் விபரங்களைப் படித்து பெருமைப் பெற்றதைப் பாராட்டி, சிறப்பு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment