காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 10 October 2024

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது


காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு கே. என். நேரு, மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாநகராட்சி மேயர் எஸ். முத்துத்துரை, துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad