திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்திய தேசிய விழிப்புணர்வு பேரணி பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 155 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய தேசிய விழிப்புணர்வு பேரணி மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஏ. சி. சஞ்சய் காந்தி, மாநில மாவட்ட நகர வட்டார பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment