சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சாம்சங்க் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
சாம்சங் தொழிலாளர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆதரவு ஆர்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக மாவட்ட தலைவர் மு. க. புரட்சித்தம்பி அவர்கள் தலைமையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வே. சிங்கராயர், மு. குமரேசன் ஆ. வீ. ரவி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் தென்கொரியா சாம்சங் அலுவலகத்தில் தொழிலாளர் சங்கம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சங்கம் அமைக்க அனுமதிக்காதது, எட்டு மணி நேர வேலையை அமல்படுத்திடவும், ஓவர் டைம் வேலை வாங்குவதை நிறுத்திடவும், வேலை நேரத்தில் மனித சக்தியை உணர்ந்து வேலை வாங்குதல், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ம. சகாய தைனேஸ் ஆர்ப்பாட்ட விளக்கவுரையும், மாநில துணைத்தலைவர் மா. ஆரோக்கியராஜ் ஆர்ப்பாட்டப் பேருரையும் ஆற்றினர். மாவட்டத் துணைத் தலைவர்கள் அமலசேவிர், சேவியர்சத்தியநாதன், ஜீவா ஆனந்தி மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் பஞ்சுராஜூ, முத்துக்குமார், கஸ்தூரி மற்றும் கல்வி மாவட்ட தலைவர்கள் ஜான்கென்னடி, ஜோசப் மற்றும் கல்வி மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்ட உரை நிகழ்த்தினர். மேலும் மாவட்ட செயலாளர்கள் நாகராஜ், முத்துச்சாமி தயானந்தன் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையும், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி உரையும் ஆற்றினர்.
No comments:
Post a Comment