சிவகங்கையில் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆவின் பொதுமேலாளர் பாண்டி செல்வி, கால்நடை மருத்துவ மருத்துவர் ஈஸ்வரி, மருத்துவர் தேவ சுஹா ஆகியோர் மாடுகளுக்கு பரவும் நோய்களுக்கு எளிதில் குணமடையும் மூலிகை மருத்துவம் பற்றி கிராம நிலை ஊழியர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். ஆவின் மருத்துவர் விஜயகுமார், திலிபன் ராஜா மற்றும் கிராம நிலை ஊழியர்கள், பால் உற்பத்தியாளர்கள் திரளாக இவ்விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment