மருது சகோதரர்களின் 223வது குருபூஜை விழாவை முன்னிட்டு காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸார் மரியாதை செலுத்தினர்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகங்கை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஏ. சி. சஞ்சய் காந்தி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், மாமன்ற, நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment