மானாமதுரை 19 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நூலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை வார்டு எண் 19 ல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்திற்கான அடிக்கல் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், நகர்மன்ற உறுப்பினர்கள் அழகர்சாமி, செல்வகுமார், விஜயகுமார், சண்முகப்பிரியா, நகர் கழக துணைச் செயலாளர் மன்னர் மன்னன், 6-வது வார்டு செயலாளர் சிவாஜி, 20-வது வார்டு பொறுப்பாளர் தர்மா, மீனவரணி பாஸ்கரன், கலை இலக்கிய பிரிவு சோமசுந்தரம், நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர்கள், அரசு துறை அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment