மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்புயில் முளைப்பாரி உற்சவ விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மக்களின் குறைகள் தீரவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் ஏழு நாட்களுக்கு முன்பு செவ்வாய் முளைப்பாரி, காப்பு கட்டி, விரதம் இருந்து, முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை விதைத்து நன்றாக முளைத்தவுடன் கோயில் முன்பாக வைத்து ஏழு நாட்கள் கும்மி பாட்டு ஒயிலாட்டம் என கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் ஏழு நாளும் விரதம் இருந்து செவ்வாய் இரவு தெய்வத்திற்கு உணவுகள் பரிமாறி, சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு மூன்று முதல் ஒன்பது சட்டிகள்வரை சட்டிசோறு எடுத்து சுந்தரவல்லி அய்யனார் கோயில் முன்பு படையல் வைத்து வணங்கி வருகின்றனர். தொடர்ச்சியாக புதன்கிழமையன்று முளைப்பாரி ஓடுகளை சிறியவர் முதல் பெரியவரை மற்றும் பெண்கள் அனைவரும் தலையில் முளைப்பாரி ஓடுகளை தூக்கி விவசாயத்திற்கு சொந்தமான கம்மாயில் முளைப்பாரி ஓடுகளை கண்மாய் நீரில் முக்கியப்படி சூரிய பகவானை வழங்கும் திசையை நோக்கி கும்பிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி பொதுமக்கள் விழாவை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment