இளையான்குடி மேலையூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்ட மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் மேலாயூர் ஊராட்சி மேலாயூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கட்ராமன், மேலாயூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பார்த்தசாரதி, மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் மலைமேகு, கிளைச் செயலாளர் கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லெனின், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலசந்தர், ஒன்றிய பொறியாளர் அணி அகிலேஷ், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment