இளையான்குடியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இருசக்கர மிதிவண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் திருவள்ளூர் ஊராட்சி புதூர் ஹாஜி.கே.கே. இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இருசக்கர மிதிவண்டியினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சை முகமது, பள்ளி நிர்வாகிகள் காட்டு பாவா, லியாகத் அலி, சலீம் கான், ஜபருல்லா கான், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கருப்பண்ணன், மேற்கு ஒன்றிய அவை தலைவர் மலைமேகு, கிளைச் செயலாளர் கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் லெனின், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலசந்தர், ஒன்றிய பொறியாளர் அணி அகிலேஷ், ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment