மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் ஓ.வெ.செ மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர் கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணை தலைவர பாலசுந்தர், நகர் மன்ற உறுப்பினர்கள் அழகர்சாமி, திமுக கட்சி நிர்வாகிகள் செல்வகுமார், விஜயகுமார், சண்முகப்பிரியா, நகர் கழக துணைச் செயலாளர் மன்னர் மன்னன், 6வது வார்டு செயலாளர் சிவாஜி, 20வது வார்டு பொறுப்பாளர் தர்மா, மீனவர் அணி பாஸ்கரன், கலை இலக்கியப் பிரிவு மோகனசுந்தரம், பள்ளி தலைமையாசிரியர் முருகன், மாணவச் செல்வங்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment