சாத்தரசன்கோட்டையில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாவதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் குடிநீரின்றி தவிப்பு. மாவட்ட நிர்வாகம் அலட்சியம்.
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டையில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து வேளாங்குளம், சலுகைச்சாமிபுரம், செங்குளம் வழியாக பூவாளி வரை சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சாத்தரசன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் குழாயானது உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்ணெதிரே நிலவி வரும் இந்த அவலநிலையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் முன்வராமல் அலட்சியம் செய்து வருவது தங்களுக்கு வேதனை அளிப்பதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் பலர் புகார் அளித்து வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து கிராம பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாறும், எதிர்காலங்களில் குழாய் உடைப்பு ஏற்படாதவாறு தடுத்திட நடவடிக்கை எடுக்குமாறும் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment