பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் 24x7 கட்டுப்பாட்டு அறைக்கு சிறப்பு பணியாளர்கள் நியமனம்.
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பெறப்படும் செய்திகள், கடிதங்கள், நிகரிச்செய்திகள், தந்திகள், ஒயர்லெஸ் மற்றும் மின்னஞ்சல் செய்திகள் ஆகியவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்கும்பொருட்டு 18.10.2024 முதல் 31.10.2024 வரை சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் மற்றும் வளர்ச்சிப்பிரிவில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள்/உதவியாளர்கள், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள்/இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் (24 X 7) சிறப்புப் பணிபுரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி அறிவுரை மூலமாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மு. முத்துகழுவன் செயல்ஆணை வாயிலாக உத்தரவிடப்படுகிறது.
மேலும் பணியாளர்கள் அனைவரும் தனக்குரிய பணிநேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தவறாது பணிக்கு வரவும், அங்கு வைக்கப்பட்டுள்ள வருகைப்பதிவேட்டில் தங்கள் வருகையினை பதிவு செய்யவும், மேலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 மற்றும் 246233 என்ற தொலைபேசியின் மூலமாக வரப்பெறும் புகார்கள்/செய்திகளை கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் (Complaint Register) பதிவு செய்து அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக (அனைத்து துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் Complaint Register-ல் இணைக்கப்பட்டுள்ளது) தகவல் தெரிவிக்கவும், கட்டுபாட்டு அறைக்கு பணிக்கு வரும் பணியாளர்கள் தங்களது பணிநேரம் முடிந்தபின்னர் பணியிலிருந்தபோது வரப்பெற்ற புகார்கள்/செய்திகள் குறித்த விபரத்தை பேரிடர் மேலாண்மை பிரிவில் தவறாது தெரிவிக்கவும் ஆணையிடப்படுகிறது என்று புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment