இளையான்குடி சாலை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்.
அக்டோபர் 2-ஆம் தேதி 155-வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் சாலைகிராமம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், இக்கிராமத்தில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பாலின சமத்துவம், போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வி சாத்தையா, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட பிரதிநிதி கருணாகரன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், மாணவரணி சாமிவேல், ஊராட்சி செயலாளர் கலந்தனர்.
No comments:
Post a Comment